கடன் அட்டை என்றால் என்ன?
கடன் அட்டை என்பது ஒருவகையில் கடன் பெறுவதாகும். நீங்கள் ரொக்கம் பயன்படுத்தாமல், அதாவது கடனில், பொருட்களும் சேவைகளும் வாங்க இது அனுமதிக்கும். எனவே, நீண்ட கால கடன் ஏற்பாடாக அல்லாமல், வசமதியாகப் பணம் கட்ட உதவும் வழியாகவே கடன் அட்டையக் கருதவேண்டும். அட்டை வழங்குபவரிடம் (வழக்கமாக வங்கி) கடன் அட்டை பெற நீங்கள் விண்ணப்பிக்கலாம். உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டால், கடன் வரம்புத் தொகையுடன் அட்டை உங்களுக்கு வழங்கப்படும்.