தமிழ்

வங்கி

 • வங்கி கணக்குகள் பற்றி நீங்கள் அறியவேண்டிய விவரங்கள்

  • 28 May 2012
  • 7.41 MB
  பணமும் வங்கியும் அன்றாட வாழ்க்கையின் அங்கங்கள்.  உங்கள் தேவைக்கேற்ப செம்மையான முறையில் ஒரு வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுத்து அதைப் பயன்படுத்த உங்களுக்கு உதவும் வங்கிக் கணக்குகள், நடைமுறைத் தகவல்கள் பற்றிய பயனுள்ள தகவல்களை இந்த வழிகாட்டி ஏடு உங்களுக்கு விளக்குகிறது.

கடன்

 • கடன் அட்டைகள் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

  • 28 May 2012
  • 4.01 MB

  கடன் அட்டை என்றால் என்ன?

  கடன் அட்டை என்பது ஒருவகையில் கடன் பெறுவதாகும். நீங்கள் ரொக்கம் பயன்படுத்தாமல், அதாவது கடனில், பொருட்களும் சேவைகளும் வாங்க இது அனுமதிக்கும். எனவே, நீண்ட கால கடன் ஏற்பாடாக அல்லாமல், வசமதியாகப் பணம் கட்ட உதவும் வழியாகவே கடன் அட்டையக் கருதவேண்டும். அட்டை வழங்குபவரிடம் (வழக்கமாக வங்கி) கடன் அட்டை பெற நீங்கள் விண்ணப்பிக்கலாம். உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டால், கடன் வரம்புத் தொகையுடன் அட்டை உங்களுக்கு வழங்கப்படும்.

 • கார் கடன் வாங்குதல் நீங்கள் அறியவேண்டிய விவரங்கள்

  • 28 May 2012
  • 4.12 MB

  தவணைக் கொள்முதல் திட்டத்தின் கீழ் கார் வாங்கப் பணத்தைப் பெறும்போது எவை எவற்றை எல்லாம் கார் வாங்குவோர் கவனிக்க வேண்டும்? அதாவது வட்டியை கணக்கிடும் முறை, அமலாகும் வட்டி விகிதம், முன்னதாகவே பணத்தை மீட்பது போன்றவற்றை எல்லாம் இந்தக் கையேடு விளக்குகிறது. தவணைக் கொள்முதல் சட்டத்தில் அண்மையில் செய்யப்பட்ட திருத்துங்களும் இதில் விளக்கப்படுகின்றன.

 • பணம் கடன் வாங்குதல் குறித்த மணி சென்ஸ் அட்டவணை

  • 28 May 2012
  • 3.76 MB

  கடன் வாங்குமல், வீடு அல்லது கல்விக்கான உங்களின் நீண்ட கால குறிக்கோள்களை நிறைவேற்றிட உதவிடும். இருப்பினும் அளக்கு அதிகமாக கடன் வாங்குவது நிதி பிரச்சனையை ஏற்படுத்திடக் கூடும். இந்த வழிகாட்டி கையேட்டில், நீங்கள் கடன் வாங்குவதற்கு முன்பாக கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து விளக்கமாக மணிசென்ஸ் எடுத்துரைக்கிறது. மேலும் நீங்கள் உங்கள் கையிருப்பின் நிலவரத்தை மதிப்பிடுவதற்கு தேவையான அட்டவணையை மணிசென்ஸ் வழங்குகிறது.

 • வீட்டுக் கடன்கள் பற்றி - வீட்டுக் கடன் எடுப்பதற்கு முன் வங்கியிடம் கேட்க வேண்டிய முக்கிய கேள்விகள் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

  • 28 May 2012
  • 156.35 KB

  வீடு வாங்குவது பலருக்கும் தங்கள் வாழ்நாளில் செய்யும் மிகப் பெரிய செலவாக இருக்கும். இதற்காக நீண்டகால நிதிப் பொறுப்பையும் அவர்கள் ஏற்கவேண்டும்.  

  உரிமையாளர் தங்குவதற்காக வாங்கும் வீட்டுக் கடன்களில் இந்த வழிகாட்டி கவனம் செலுத்துகிறது. வீட்டுக் கடன் அல்லது அடமானக் கடன் என்பது, நீங்கள் வாங்கும் சொத்தை ஈடுவைத்து பெறும் பருவக் கடனாகும். கடன் கொடுக்கும் வங்கிக்கே சொத்தில் முதல் உரிமை இருக்கும். வீட்டுக் கடன் தவணையைக் கட்ட அல்லது முன்பணம் கட்ட அல்லது இரண்டுக்குமே மத்திய சேமநிதி சேமிப்பு பயன்படுத்தப்பட்டிருந்தால், மத்திய சேமநிதிக் கழகத்திற்கு இரண்டாம் உரிமை கிட்டும்.

 • உங்கள் கடன் அட்டைகளைப் பாதுகாத்திடுக உங்கள் ரொக்கத்தைப் போலவே

  • 28 May 2012
  • 257.76 KB

  எதிர்வரும் 1 நவம்பர் 2009 முதல், உங்கள் கடன் அட்டை தொலைந்துவிட்டதாக அல்லது திருட்டுப்போய்விட்டதாக நீங்கள் தகவல் தெரிவிப்பதற்குமுன் அதிகாரமின்றி செய்யப்பட்ட செலவுகளுக்கு அட்டைதாரர்கள் ஏற்கும் பொறுப்புக்கு வங்கிகள் வரம்பு விதிக்கும். ஆனால் நீங்கள் மோசடி செய்தால், கவனக்குறைவுடன் நடந்துகொண்டால், அல்லது உங்கள் அட்டை தொலைந்துவிட்டது  அல்லது திருட்டுப்போய்விட்டது என்பது தெரிந்தவுடனே வங்கியிடம் தெரியப்படுத்த தவறினால், உங்கள் அட்டையைப் பயன்படுத்தி செய்யப்பட்ட அதிகாரமற்ற பரிவர்த்தனைகளுக்கு நீங்களே பொருப்பேற்க நேரிடும்.

முதலீடுகள்

 • முதலீட்டுத் திட்டங்கள் பற்றி நீங்கள் அறியவேண்டிய விவரங்கள்

  • 28 May 2012
  • 4.18 MB

  இந்த வழிகாட்டி கையேடு, நீங்கள் முதலீட்டு முடிவை எடுப்பதற்கு முன் நீங்கள் கவனிக்க வேண்டிய அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கட்டணம், இடர், திட்ட அம்சங்கள், உங்கள் சொந்த நிதி நிலைமை போன்ற முக்கியமான அம்சங்களைக் கருத்தில்கொண்டு செயல்பட்டால் பொதுவாகச் செய்யும் முதலீட்டு தவறுகளை நீங்கள் தவிர்க்கலாம்.

மற்றவை

 • சரிவரச் செய்தல்: உங்கள் நிதி நிறுவனத்துடன் ஏற்படும் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வது எப்படி

  • 28 May 2012
  • 10.44 MB

  அறிமுகம்

  நீங்கள் வாங்கிய ஒரு நிதித் திட்டம் அல்லது நிதி நிறுவனம் ஒன்றின் சேவைத் தரங்கள் குறித்து உங்களுக்குப் பிரச்சினை ஏதும் ஏற்பட்டால் அது பற்றி நீங்கள் என்ன செய்யலாம், உதவிக்கு யாரை நாடலாம் என்பதை இந்த வழிகாட்டி உங்களுக்கு விளக்கும்

 • நிதி ஆலோசகருடனான வணிகத் தொடர்பு:

  • 28 May 2012
  • 15.69 MB

  பயனீட்டாளர்களுக்கு முதலீட்டுத் திட்டங்கள் பற்றி ஆலோசனை வழங்கும் நிறுவனங்களையும் தனி நபர்களையும் நிதி ஆலோசகர்கள் சட்டம் (FAA) கட்டுப்படுத்துகிறது. சிங்கப்பூர் நாணய வாரியத்தால் (எம்ஏஎஸ்) நிர்வகிக்கப்படும் இச்சட்டம் (FAA), ஒரு பயனீட்டாளர் என்னும் முறையில் உங்கள் நலன்களைப் பாதுகாக்க சில முக்கிய நடவடிக்கைகளை அறிமுகம் பொதுவான தரங்களை நிர்ணயிக்கிறது. இந்த வழிகாட்டி, இம்மாற்றங்கள் உங்களை எப்படி பாதிக்கின்றன என்பதை விளக்குகிறது.

 • பயனீட்டாளர் பாதுகாப்பு நியாய வர்த்தகச் சட்டத்தில் நிதித் திட்டங்களும் சேவைகளும் உள்ளடக்கம்- இது உங்களுக்கு எவ்வாறு பயனளிக்கும்?

  • 28 May 2012
  • 858.43 KB

  இந்த மாற்றங்கள் உங்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதை இந்த வழிகாட்டி விளக்குகிறது. நிதி நிலையம் அல்லது அதன் பிரதிநிதி (இவையிரண்டும் இவ்வழிகாட்டியில் “நிதி நிலையம்” என ஒருசேரக் குறிப்பிடப்படும்) உங்களுடனான பரிவர்த்தனைகளில் நியாயமாகச் செயல்படவில்லை என்ற உங்களது நம்பிக்கைக்குக் காரணங்கள் இருந்தால், நீங்கள் நியாயம் பெற என்ன செய்யமுடியும் என்பதையும் வழிகாட்டி எடுத்துரைக்கிறது.

 • mymoneybook

  எனது பணப் புத்தகம்

  • 26 January 2015
  • 2.31 MB

  நமது கனவுகளை மெய்ப்பிக்கவும், இலக்குகளை அடையவும், நமது பொறுப்புகளை நிறைவேற்றவும் - நம்அனைவருக்கும் எதிர்காலத் திட்டங்கள்இருக்கும். எனது பணப் புத்தகம் உங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உள்ள மக்கள், தங்களுக்குப் பயனளித்த குறிப்புகளை இதில் பகிர்ந்துள்ளனர். உங்களின் இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்யவும், எதிர்காலத் தேவைகளை முன்கூட்டியே திட்டமிடவும் இந்தக் குறிப்புகள் உதவியாக இருக்கும்.